top of page

சமூக வலைதள தொடர்புகளுக்கு

  • Facebook Classic
  • Google+ App Icon
  • LinkedIn App Icon
  • Twitter Classic

© KS Kalai

புலப்படாத முகம் !

 

எதுவாக இருந்தாலும் 
கேட்டவுடன் தருவதும் 
அமைதிக் காப்பதும் 
இந்த புலப்படாத முகத்தின் 
பழக்கப்பட்ட பண்பாடு ! 

தெளித்தால்,உமிழ்ந்தால், 
கழித்தால், மிதித்தால், 
பறித்தால்,வெட்டினால் - 
மணம் மாற்றிக் கொள்ளும் 
மனம் மாற்றிக் கொல்லாது ! 

வான் பார்த்துக் கிடக்கும் 
புலப்படாத முகத்தின் - 
தேய்ந்துப் போன 
ரேகைகளாய் ஆறுகள் ! 
உடைத்து நசுக்கும் 
பருக்களாய் குன்றுகள் ! 
செதுக்குவதாய் சீரழிக்கும் 
மயிர்ச்செடிகளாய் மரச்செடிகள் ! 
பெருக்கெடுக்கும் கண்ணீராக 
கடல், சமுத்திரங்கள்... 
காட்சியழிந்து காட்சியளிக்கும் ! 
=== 
அழுதால் வெள்ளம் ! 
கதறி அழுதால் சுனாமி ! 
இறுகினால் பனிமலை ! 
குமுறி வெடித்தால் எரிமலை ! 
தடுமாறினால் சூறாவளி 
நிலைகுலைந்தால் கொந்தளிப்பு ! 
=== 
பூமித்தாய் என்றவர்கள் 
புத்திசாலிகள் ! தீர்க்கதரிசிகள் ! 

மிதித்து, உதைத்து, எரித்து 
அடித்து,கெடுத்து,கற்பழித்து 
கஷ்டப்படுத்தினால் 
பொறுமையாய் இருப்பானா 
பூமித் தகப்பன் ? 

சோகமே போதும் 
கொன்றொழிக்க 
கோபப் பட்டால் என்னவாகும் ? 

கவலையற்க ! - அவள் 
கோபப்படத் தெரியாதவள் ! 

அஞ்சற்க ! - அது 
பூமித்தாய் ! பூமித் தகப்பனல்ல !!

bottom of page