top of page

சமூக வலைதள தொடர்புகளுக்கு

  • Facebook Classic
  • Google+ App Icon
  • LinkedIn App Icon
  • Twitter Classic

© KS Kalai

சாப்பாட்டு பாட்டு !

 

புட்டியில் பைகளில் பொதியில் 
வாங்கிச் சூடாக்கினால் 
சட்டியில் சமையல் நொடியில் ! 
== 
"மோரா"! ஐயோ! புளிப்பு ! 
கொண்டா! அண்டா- 
"கோலா" என்றால் சிறப்பு ! 
== 
பீட்சா தின்றால் அருமை ! 
உப்பிய குழந்தைகள் 
அறிவார் அதனின் பெருமை ! 
== 
ஆங்கிலக் கோழிப் பொரியல் 
அதுதான் நாளை 
சாமிக்கும் கிடைக்கும் படையல் ! 
== 
எப்படி இருக்கும் அம்மி ? 
கூகுளில் தேடி 
பிள்ளைக்கு காட்டுவார் மம்மி ! 
== 
எப்படி வைப்பது தேத்தண்ணி ? 
விழுந்து! விழுந்து! 
கணினியில் படிக்கிறாள் புதுகன்னி ! 
== 
வாழை இலையில் சாப்பாடு? 
வேண்டாம்! அது - 
ஏழை கூட்டத்தின் பண்பாடு ! 
== 
கையாலுண்பது பாமரப் புத்தி 
தோசை தின்பதும் 
முள்ளுக் கரண்டியில் கொத்தி ! 
== 
உண்டால்! கழித்தால்! காகிதம் ! 
வெள்ளையனைப் 
பார்த்துப் பழகிய இங்கிதம் ! 
== 
பச்சிலை கொய்து அவித்து 
ருசிப்பார்! புசிப்பார்!- 
சத்தெலாம் கட்டி வடித்து ! 
== 
பழங்களில் ஏற்றுவார் ஊசி 
பிஞ்சிலே பழுத்தது 
வயிற்றிலே வதைக்கும் *ஊசி ! 
== 
தானியம் புசிக்க மறுப்பார் 
சொந்தக் காசில் - 
சூனியம் செய்தே இறப்பார்! 
== 
கொழுப்பால் பெருத்த தலைமுறை 
முப்பொழுதும் 
நஞ்சையே தின்றிடும் நடைமுறை ! 

-------------------------------------------------- 
(*ஊசி = ஊசிப்போய் - கெட்டுப்போய்)

bottom of page